பாணந்துறையைச் சேர்ந்த மஹபெல்லான பகுதியில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில், பேஸ்புக் மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வொன்றில் 26 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகக் கிடைத்த இரகசிய தகவலின் பேரில், அலுபோமுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன் போது, களியாட்டத்தில் ஈடுபட்ட 26 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் பல்கலைக்கழக மாணவர்கள் எனவும் பொலீசார் உறுதி செய்துள்ளனர்.
இவர்கள் மீது மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன.