(அபூ உமர்)
பொத்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ள அருகம்பே பிரதேசம் உல்லாசத் துறைக்கான பிரதேசமாகும். இந்த பிரதேசத்தில் பல ஹோட்டல்கள் அமைக்கப்பட்டும் இது வரையும் Three Phase மின்சாரம் பொருத்துவதற்கு விண்ணப்பம் செய்தும் மின்சார இணைப்புகள் வழங்கப்படாமல் உள்ளதாக பொத்துவில் பிரதேச மக்கள் முறைப்பாடு செய்கின்றனர். எனவே பொத்துவில் பிரதேசத்தில் புது ரான்ஸ்போமர்களை பொருத்துமாறு மின்வழு அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் மின்வலு அமைச்சர் திரு. குமார ஜயக்கொடி தலைமையில் அண்மையில் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.
மின்வழு அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால அறிக்கைகளை பெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.