மத்திய கிழக்கு பிரதேசத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலுக்கு இலங்கையர்களை தொழிலுக்காக அனுப்பும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் கட்டுமானம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளில் தற்போது 20,000-க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பணியாற்றி வருவதுடன், இலங்கை வேலைவாய்ப்பு சந்தையில் இஸ்ரேலுக்கான தேவையும் உயரும் நிலையில் காணப்பட்டது.
இந்நிலையில், பதற்றம் குறையும் வரை புதிய வேலைவாய்ப்பு அனுப்பலைத் தற்காலிகமாக நிறுத்துமாறு, இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிக்குழுவிற்கு அறிவித்துள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேலுக்கு வேலைக்காக செல்ல தகுதி பெற்ற நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.