Top News
| அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் | | வான வேடிக்கையான துடுப்பாட்டத்தினால் வீரமுனை மின்னொளி மென்பந்து சுற்றுப்போட்டியை கைப்பற்றிய அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணி | | முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் வட – கிழக்கில் இன்று நடைபெறும் ஹர்த்தால் காலையில் மாத்திரம் இடம்பெறும் |
Aug 18, 2025

டிரம்பை கொல்ல ஈரான் திட்டம் – நெதன்யாகு அதிர்ச்சி தகவல் 

Posted on June 16, 2025 by Hafees | 68 Views

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 3-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கொலை செய்ய ஈரான் திட்டம் போட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு,

“அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கொல்ல ஈரான் திட்டமிட்டிருக்கிறது. ஈரானின் அணு ஆயுதத் திட்டத்துக்கு அச்சுறுத்தலாக டிரம்ப் இருப்பார் என்பதால் முதல் எதிரியாக டிரம்புக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கொல்ல திட்டம் போட்டுள்ளார்கள். ஈரான் மூலம் உலகுக்கு ஏற்படும் அணு ஆயுத அச்சுறுத்தலை ஒழிக்கத் தேவையானதை செய்வோம்” என்று தெரிவித்தார்.