Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

கிழக்கில் சூரிய மின்கலத் திட்ட இணைப்புகளில் சிக்கல்

Posted on June 16, 2025 by Admin | 407 Views

(அபூ உமர்)

புதிய சூரிய மின்கலம் இணப்புகளைப் பெற கிழக்கு மாகாணத்தில் ரான்ஸ்போமர்களை பொருத்துவதற்கான விஷேட எற்பாடுகளை மின்வழு அமைச்சு முன்னெடுக்க வேண்டும் என மின்வழு அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் மின்வலு அமைச்சர் திரு. குமார ஜயக்கொடி தலைமையில் அண்மையில் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.

இலங்கை மின்சார சபையின் சூரிய மின் கலம் பொருத்தியுள்ள முதலீட்டாளர்களின் கொடுப்பனவுகளில் கிழக்கு மாகாணத்தில் முரண்பாடுகள் நிலவுகின்றன. கடந்த பல வருடங்களாக இலங்கை மின்சார சபையுடன் ஒப்பந்தத்தை செய்து நாட்டுக்குத் தேவையான சூழலுக்கு பாதிப்பற்ற மின்சாரத்தை உற்பத்தி செய்து விநியோகித்து வரும் மின்கலம் பொறுத்தியுள்ள முதலீட்டாளர்களின் மத்தியில் நிலவும் ஏற்றத்தாழ்வான முரண்பாடான கொடுப்பனவு , அதிகமான பராமரிப்பு செலவு, CEB இனது உயர் மின் அழுத்தங்களின் போது ஏற்படும் பாதிப்புகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு(Insurance) பிரச்சினைகள் , உரிய நேரத்திற்கு கொடுப்பனவுகளை வழங்காமை இவ்வாறான கடினமான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சூரிய மின்கல உற்பத்தியாளர்கள் CEB இனது காலத்திற்கு காலம் மாற்றப்பட்ட விலைச் சூத்திரத்திற்கு அமைவாக ஆரம்ப காலத்தில் இக்கட்டான பொருளாதார நிலைகளுக்கு மத்தியில் முதலீடு செய்தவர்களும் முதல் 7 வருடங்கள் அலகு ஒன்றிற்கு 22 ரூபாவும் 7 வருடங்களின் பின்னர் 15.50 ரூபாவும் வழங்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் ஏனையவர்களுக்கு 37, 27 ரூபா 20 வருடத்துக்கும் என வேறு தொகைகளில் வழங்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தில் சூரிய மின்கலம் பொருத்துவதற்கான புதிய முதலீட்டாளர்கள் 5000 பேர் இலங்கை மின்சார சபையிடம் விண்ணப்பம் செய்த போதும் ரான்ஸ்போமர்கள் பொருத்தப்படாததால் சூரிய மின்கலம் பொருத்தும் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடியாத நிலமை கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்றன. எனவே கிழக்கு மாகாணத்தில் ரான்ஸ்போமர்களை பொருத்துவதற்கான விஷேட எற்பாடுகளை மின்வழு அமைச்சு முன்னெடுக்க வேண்டும் என உதுமாலெப்பை கேட்டுக்கொண்டார்.

இதன்போது அமைச்சர், மின்வழு அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபாலவினை அறிக்கைகளை பெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்தார்.