Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

பெருந்தோட்ட அமைச்சின் சொகுசு வாகனங்கள் விற்பனைக்கு

Posted on June 16, 2025 by Hafees | 166 Views

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள் மற்றும் 03 பழைய வாகனங்கள்) விற்பனை செய்வதற்கு, தகுதிவாய்ந்த விலைமனுதாரர்களிடமிருந்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோர் கடந்த வாரம் இந்த விற்பனைக்காக ஒதுக்கப்பட்ட வாகனங்களை ஆய்வு செய்தனர்.

இலங்கை குடிமக்கள் அல்லது இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் மட்டுமே இந்த டெண்டரில் பங்கேற்க தகுதியுடையவர்கள். தேசிய அடையாள அட்டையின் அல்லது நிறுவனம் அல்லது அமைப்பின் பதிவுச் சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி ஒன்று டெண்டர் சமர்ப்பிப்புடன் இணைக்கப்பட வேண்டும்.

மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு ஆர்வமுள்ள விலைமனுதாரர்கள், 0112186076 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக, சிரேஷ்ட உதவி செயலாளர் (நிர்வாகம்) அல்லது போக்குவரத்து அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

மேலும், 2025 ஜூன் 16 முதல் 2025 ஜூலை 07 வரை அலுவலக நாட்களில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை வாகனங்களை பரிசீலனை செய்யலாம் என்றும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்ட்ளளது.