Top News
| “கள்வர்களின் கூடாரம் பிரதேச சபை” எனும் கறைபடிந்த எண்ணத்தினை சேவைகளால் துடைத்தெறிவேன்-தவிசாளர் உவைஸ் | | ஏ.ஐ. உதவியுடன் சிங்களம் – தமிழ் மொழிபெயர்ப்பு மென்பொருள் அறிமுகம் | | பல்கலைக்கழக மாணவியை நிர்வாண புகைப்படங்களால் மிரட்டிய 24 வயது இளைஞர் கைது |
Jul 4, 2025

2025 ஹஜ் ஏற்பாடு மிகச் சிறப்பு – சவூதி அரசின் அர்ப்பணிப்புக்கு முழு முஸ்லிம் சமூகமும் வாழ்த்து

Posted on June 16, 2025 by Admin | 132 Views

(எஸ். சினீஸ் கான்)

ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஜந்தாவது கடமையும் வசதி படைத்தவர்கள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய ஆன்மீக கடமையாகும். வருடாவருடம் பல நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அல்லாஹ்வின் பாதையில் இறையருளை பெறும் நோக்கில் இவ் யாத்திரையை மேற்கொள்கின்றனர். இம்முறையும் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் ஹஜ் யாத்திரையில் பங்கேற்றனர்.

2025 ஆம் ஆண்டு ஹஜ் ஏற்பாடு உலகமெங்கும் கவனத்தை ஈர்க்கும் விதமாக மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆண்டு சவூதி அரேபியா அரசு ஹஜ் யாத்திரைக்கு அளித்திருக்கும்  ஏற்பாடுகள் முன்பை விட அதிக உன்னதமான நவீன முறையில் காணப்பட்டது.

சவூதி அரேபிய அரசு கடந்த சில ஆண்டுகளாக ஹஜ் ஏற்பாடுகளை மேம்படுத்த, யாத்திரையாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வசதிகளுக்கு மிகுந்த கவனம் செலுத்தி வந்ததுடன் இம்முறை உயர் தொழில்நுட்பம் மற்றும் நவீன வசதிகள் உருவாக்கப்பட்டு உயர்ந்த சேவை வழங்கப்பட்டது.  ஹஜ் யாத்திரிகள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைத்து, அவர்கள் ஆன்மிக பயணத்தை அமைதியானதும் பாதுகாப்பானதுமாக மேற்கொள்ள சவூதி அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை பாராட்டத்தக்கது.

உயர்தரமான சுகாதார வசதிகள் –

லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடும் சூழ்நிலையில், நோய்கள் பரவாமல் இருக்க சுகாதார வசதிகள் மிக மிக அவசியமானவை. இந்த ஆண்டில், சவூதி அரசு அனைத்துப் புனித தலங்களிலும் நவீன மருத்துவ நிலையங்கள், அவசர சிகிச்சை, வைத்திய முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டதுடன் 24 மணிநேர டிஜிட்டல் மதுத்துவ சேவையும் மேற்கொள்ளப்பட்டது.

பாதுகாப்பு நடவடிக்கை –

மக்கள் ஒரே இடத்தில் கூடும்போது ஏற்படக்கூடிய நெருக்கடிகளைத் தடுக்க, பாதுகாப்பு படைகளின் பங்கு இவ்வாண்டு மிக முக்கியமானதாக இருந்தது. மனிதக் கூட்டங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் நுட்பம் மற்றும் அனுபவம் கலந்து செயல்பட்டனர். பயணிகள் சுதாரிக்கக்கூடிய இடர்பாடுகளை முன்னிலையே அறிந்து தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன் நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டது.

நவீன தொழில்நுட்பம் –

தொடர்புத் தகவல், தரவுகளின் பகிர்வு, வழிகாட்டல், குழுக்களை ஒழுங்குபடுத்தல் ஆகியவற்றில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகித்தது. ஹஜ் பயணிகளுக்கான மொபைல் செயலிகள் போன்ற வழிகாட்டும் உபகரணங்கள் ஆகியவை பயணிகளின் அனுபவத்தை எளிமையாக்கின.

நிர்வாக ஒழுங்குமுறை –

புனித மஸ்ஜிதுகள், மினா, அறஃபா, முஸ்தலிபா போன்ற இடங்களில் தங்கும் வசதிகள் மற்றும் போக்குவரத்து வழிகள் உள்ளிட்ட அனைத்தும் முன்நோக்கிப் பரிசீலிக்கப்பட்டு மிகச் சிறப்பாக நவீன அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பயணியும் அந்த பயணத்தின் புனிதத்தையும் அமைதியையும் உணரக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டது.

இவ்வாண்டுக்கான ஹஜ் யாத்திரை யாத்திரிகள் உட்பட முழு முஸ்லிம் சமூகத்தினதும் பாராட்டை பெற்றதற்கு காரணம் சவூதி அரேபிய அரசாங்கத்தின் திறமையான திட்டமிடலும், பல்துறை ஒத்துழைப்புக்கள் தான் எனலாம்.