Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளரின் வாட்ஸ்அப் கணக்கு தற்போது வழமைக்கு திரும்பியது | | அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளராக பாறூக் நஜீத் கடமையேற்பு | | “கள்வர்களின் கூடாரம் பிரதேச சபை” எனும் கறைபடிந்த எண்ணத்தினை சேவைகளால் துடைத்தெறிவேன்-தவிசாளர் உவைஸ் |
Jul 4, 2025

டிஜிட்டல் மறுசீரமைப்பு திட்டம் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல்

Posted on June 18, 2025 by Arfeen | 95 Views

அரசதுறையில் சேவைகளை வழங்கும் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு படியாக, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சினால் செயல்படுத்தப்படும் டிஜிட்டல் மறுசீரமைப்பு தொடர்பான வேலைத்திட்டம் குறித்த கலந்துரையாடல் நேற்று (17) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.அந்த அமைச்சின் உள்ளக சேவைகள் மற்றும் இராஜதந்திர சேவைகளை வழங்கும் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான பணிகளை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.வெளிநாட்டுத் தூதுக்குழு சேவைகளை டிஜிட்டல் முறையில் நிர்வகித்தல், விரிவாக்கப்பட்ட டிஜிட்டல் தூதரக சேவைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான முறையான பொறிமுறையை நிறுவுதல் உள்ளிட்ட பல முக்கிய துறைகள் குறித்து இங்கு அதிக கவனம் செலுத்தப்பட்டது.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயனாளிகளுக்கு தகவல் மற்றும் சேவைகளுக்கான சிறந்த பிரவேசத்தை உறுதிசெய்து, பயனாளிகள் – நட்பு இணைய இடைவழிமுறையை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களும் இதன்போது வலிறுத்தப்பட்டன.வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கான கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் மற்றும் ஏனைய உத்தியோகபூர்வ ஆவணங்களை சமர்ப்பித்தல் போன்ற நடைமுறைகளை இலகுபடுத்தும் செயற்பாட்டு நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்தும் இங்கு பரிசீலிக்கப்பட்டது.இந்தச் மறுசீரமைப்புகள் நிர்வாகத் தாமதங்களைக் குறைத்து, பயனாளிகளின் வசதியை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.