Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

சுவிஸ் வங்கியில் அதிக பணம் வைத்திருக்கும் நாடு

Posted on June 20, 2025 by Hafees | 143 Views

சுவிட்சர்லாந்து வங்கியில் இந்தியர்களின் பணமே அதிகமாக காணப்படுவதாக அந்நாட்டின் தேசிய வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.

அதன்படி சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியப் பணத்தின் மதிப்பு ஒரே ஆண்டில் 3 மடங்கு உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

2024 ஆம் ஆண்டின் அறிக்கைப்படி அந்த பணத்தின் மதிப்பு இந்திய ரூபாவில் 37,600 கோடி எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் தனிநபர் கணக்கு கொண்டுள்ளவர்களின் பணம் மொத்த இந்திய ரூபாவில் 3,675 கோடி உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது