Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

ஹர்ஷன சூரியப்பெரும பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா

Posted on June 20, 2025 by Inshaf | 165 Views

இலங்கை தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சருமான கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.இது தொடர்பாக அவரது ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொண்டதாகவும், 2025 ஜூன் 20 ஆம் திகதி முதல் அந்த ராஜினாமா நடைமுறைக்கு வருவதாகவும், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

இந்தப் பதவியிலிருந்து விலகியதன் காரணமாக, 10வது பாராளுமன்றத்தில் ஹர்ஷன சூரியப்பெருமரின் ஆசனம் வெற்றிடமாக இருப்பதாக, 1981ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 64(5) பிரிவின் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.