Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

Posted on June 21, 2025 by Hafees | 170 Views

நேற்று (20) மதியம் ஹதரலியத்த பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்று 5,000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை வழங்கிய நபர் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் நடத்திய விசாரணையின் போது, போலி நாணயத்தாள்களை வைத்திருந்த கண்டி, உடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரிடம் இருந்து மூன்று போலி 5,000 ரூபா நாணயத்தாள்கள், இரண்டு போலி 500 ரூபா நாணயத்தாள்கள் மற்றும் இரண்டு போலி 100 ரூபா நாணயத்தாள்கள் என்பன கைப்பற்றப்பட்டன.

மேலும், சந்தேக நபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, போலி 50 ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்ட 9 கடதாசிகள், போலி 100 ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்ட 4 கடதாசிகள், போலி 500 ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்ட 4 கடதாசிகள், போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்ட 6 கடதாசிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.

இதேவேளை, இந்த போலி நாணயத்தாள்களை அச்சிட்ட சந்தேக நபரைக் கைது செய்வதற்காக கலகெதர பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு விசாரணை அதிகாரிகள் சென்றுள்ளனர்.

இருப்பினும், சந்தேக நபர் அந்த நேரத்தில் நிறுவனத்தில் இல்லை, மேலும் போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்தப்பட்ட ஒரு கணினி மற்றும் அச்சு இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஹதரலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.