அம்பாறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய கலந்துரையாடல்: பிரதேச சபை ஆட்சி அமைப்பது தொடர்பாக முக்கிய தீர்மானங்கள்
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அட்டாளைச்சேனை, இறக்காமம், காரைதீவு மற்றும் சம்மாந்துறை ஆகிய முக்கிய பிரதேச சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இன்று (22 ஜூன் 2025) அம்பாறை நகரில் நடைபெற்றது.
இச் சந்திப்புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை (பா.உ.), முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், பிரதி தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், பிரதி செயலாளர் மன்சூர் ஏ. காதர், மாவட்ட செயற்குழு செயலாளர் ஏ.சி. சமால்தீன் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் மற்றும் பிராந்திய பொது பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
பிரதேச ஆட்சி அமைப்பின் நடைமுறை, கூட்டணிகள், எதிர்கால திட்டங்கள் மற்றும் மக்கள் நலனுக்கான கருத்துகள் பரிமாறப்பட்டன. நிகழ்வின் நிறைவில், மக்கள் சேவையை முன்னிறுத்தும் வகையில், பிரதேச ஆட்சி அமைப்பு துல்லியமான கொள்கைகள் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.