iGates நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Inter Cricket Carnival – 2025” விளையாட்டு விழா நிறுவனத்தின் முகாமையாளர் திரு ஏ.ஆர். அர்சாத் தலைமையில்
இன்று அட்டாளைச்சேனை அரசினர் பயிற்சி கலாசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் பிரதம அதிதிகளாக தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும் திகாமடுல்ல தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோர் கலந்து விழாவுக்கு சிறப்பூட்டினர்.
மேலும், நிகழ்வில் பல்வேறு கல்வி நிறுவனங்களின் விரிவுரையாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு விழாவை விமரிசையாகக் கொண்டாடினர்.
விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட இவ்விழா, மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்கின்ற ஒரு சிறந்த மேடையாக அமைந்தது.