Top News
| “வருகையினை கைரேகையினூடாக பதிவதனை ஏற்க மறுப்பவர்கள் வேறு வேலை தேடலாம்” அமைச்சரவை பேச்சாளர் தபால் ஊழியர்களுக்கு அறிவிப்பு | | கல்லோயா திட்டம் மேம்பாடு குறித்து முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமையில் கலந்துரையாடல் | | அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு |
Aug 19, 2025

நாட்டில் உள்ள சிறைச்சாலை பிரதானிகள் இன்று கொழும்பில் முக்கியக் கூட்டத்தில் பங்கேற்பு

Posted on June 23, 2025 by Arfeen | 215 Views

நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து சிறைச்சாலை பிரதானிகளும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.நீதி அமைச்சரின் தலைமையில் இன்று காலை நீதி அமைச்சில் நடைபெறும் கலந்துரையாடலுக்காக சிறைச்சாலைத் துறை அவர்களை அழைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.அதன்படி, நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலை கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆணையர்களும் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.சிறைச்சாலைகள் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இந்தக் கூட்டம் நடைபெறும் என்று சிறைச்சாலைத் துறை தெரிவித்துள்ளது.