தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய ஆய்வுகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் யூனியன் தலைவராக அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த எஸ். ஹனாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம், குறித்த பீடத்தின் டீன் அஷ் ஷேக் எம். எச். ஏ. முனாஸ் அவர்களால் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.
மாணவர்களின் நலன்கள் மற்றும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில் அமைக்கப்படும் இந்த யூனியனுக்கு தலைவராக தேர்வான ஹனாஸ், எதிர்வரும் காலங்களில் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் அபிவிருத்திக்காக பங்களிக்கவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.