Top News
| இலஞ்சம் பெற்ற கல்முனை காதி நீதிபதியும் அவரது மனைவியும் ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் | | அட்டாளைச்சேனை பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு நாளை புதன் கிழமை தொடங்குகிறது | | “வருகையினை கைரேகையினூடாக பதிவதனை ஏற்க மறுப்பவர்கள் வேறு வேலை தேடலாம்” அமைச்சரவை பேச்சாளர் தபால் ஊழியர்களுக்கு அறிவிப்பு |
Aug 20, 2025

வீரர்களின் வான வேடிக்கையான துடுப்பாட்டத்தால் வெற்றி வாகை சூடியது அட்டாளைச்சேனை சோபர் அணி

Posted on June 26, 2025 by Admin | 200 Views

அட்டாளைச்சேனை சோபர் அணி சாம்பியன்! நிந்தவூர் அரேபியன் மென்பந்து கிரிக்கெட் தொடரின் அதிரடி வெற்றி

நிந்தவூர் அரேபியன் மின்னொளி மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் அரங்கேறிய இத்தொடரில் பல அணிகள் போட்டியில் பங்கேற்றதுடன், இறுதியாக சோபர் அணி தங்களது விளையாட்டு வீரர்களின் வான வேடிக்கையினாலான அதிரடி துடுப்பாட்டத்தால் மைதானத்தை வியப்பில் ஆழ்த்தியது.

துடுப்பாட்ட வீரர்கள் பாராட்டப்படத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தியதின் விளைவாக, சோபர் அணி 30,000 ரூபாய் பணப்பரிசுடன் வெற்றிக்கிண்ணத்தையும் வென்றது.

இறுதிப்போட்டியில் வெற்றியை நிர்ணயித்த ஆட்டநாயகனாக முபாரிஸ் தேர்வானார். தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக ஜெஸீல் தெரிவு செய்யப்பட்டார்.

சமூக உறவுகளை வலுப்படுத்தவும், இளைஞர்களின் திறமையை ஊக்குவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போட்டி ரசிகர்களின் பரப்பரப்பை பெற்றிருந்தது.