பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திரு அப்துல்வாசித், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) புதிய பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் நியமனம் ஒரு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை அங்கீகரிக்கும் விதமாக, கட்சியின் விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் ஏற்ப சத்தியப் பத்திரத்தில் இன்று (சனிக்கிழமை) திரு அப்துல் வாசித் கையெழுத்திட்டார்.
அவரது அதிகாரப்பூர்வ நியமனக் கடிதம், நுவரெலியாவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள விடுதியில், கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அவர்களால் வழங்கப்பட்டது.
இந்த நியமனம், கட்சியின் உயர் மட்டத் தீர்மானத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டதாக கட்சித் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.