Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு: 8 இரவு தபால் ரயில் சேவைகள் இரத்து

Posted on May 17, 2025 by Admin | 332 Views

ரயில் நிலைய அதிபர்கள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு காரணமாக, இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த 8 தபால் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரத்து செய்யப்பட்ட சேவைகளில் கொழும்பு – பதுளை, மட்டக்களப்பு – கொழும்பு, திருகோணமலை – கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் – கொழும்பு ஆகிய முக்கிய சேவைகள் அடங்குகின்றன.

நேற்று (16) நள்ளிரவு தொடங்கிய இந்த பணிப்புறக்கணிப்பு இன்று நள்ளிரவுடன் முடிவடைய உள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்நிலையில், பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று பல காலை ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன.

எனினும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்காலத்தில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத் தலைவர் சுமேத சோமரத்ன எச்சரித்துள்ளார்.