அரசு நிர்ணயித்துள்ள அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசியை அதிக விலையில் விற்பனை செய்வது சட்டவிரோதமாகும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெரிவித்துள்ளார். இது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அரிசியை நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி விற்பனை செய்வோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதற்கான அபராதத் தொகையும் குறித்தவாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனி உரிமையாளர்கள் குறித்த அபராதங்கள்:
குறைந்தபட்சம் ரூ. 100,000 அபராதம்
அதிகபட்சம் ரூ. 500,000 அபராதம் அல்லது 6 மாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும்
தனியார் நிறுவனங்கள்/புதிய நிறுவனங்களுக்கு:
குறைந்தபட்சம் ரூ. 500,000 அபராதம்
அதிகபட்சம் ரூ. 5,000,000 அபராதம்
மேலும், அரசு நிர்ணய விலையை மீறி அரிசியை விற்பனை செய்பவர்களைக் குறித்த தகவல்களை, அலுவலக நேரங்களில் 1977 என்ற இலக்கத்துக்கு அழைத்து புகாரளிக்க நுகர்வோர்களுக்கு நுகர்வோர் அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
.