Top News
| துரியன் பழம் பறிக்க வந்த இளைஞன் சுட்டுக்கொலை | | வைத்தியர் ஷர்மி ஹஸன் இலங்கையின் முதல் முஸ்லிம் நியோனடாலஜிஸ்ட் என்பதனால் பொத்துவில் மண் பெருமை கொள்கிறது | | அம்பாறை மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் |
Jul 16, 2025

அட்டாளைச்சேனையில் இன்று இரவு 8 முதல் நாளை காலை 6 வரை குடிநீர் துண்டிப்பு

Posted on July 2, 2025 by Admin | 98 Views

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் குடிநீர் விநியோகம் இன்று (புதன்கிழமை) இரவு 8.00 மணி முதல் நாளை (வியாழக்கிழமை) காலை 6.00 மணி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது.

இந்த நீர் துண்டிப்பு, அம்பாறை கொண்டவட்டுவான் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட அவசர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் காரணமாக ஏற்படுகிறது.

இதனை முன்னிட்டு, அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த குடிநீர் பாவனையாளர்கள், தேவையான அளவு நீரை முன்னதாகவே சேமித்து, சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது