Top News
| க.பொ.த.சாதாரண தர பெறுபேறுகள் ஜூலை 15க்குள் வெளியீடு | | நாட்டில் மீண்டும் துப்பாக்கி சூடு – தாய், மகள் உட்பட மூவர் காயம் | | இஸ்ரேலை நோக்கிப் பறக்கும் மேலும் 29 இலங்கைப் பெண்கள் |
Jul 6, 2025

கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் இஸ்ரேலியர்கள்

Posted on July 3, 2025 by Admin | 114 Views

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளாக வந்த சில இஸ்ரேலியர்கள், கிழக்கு மாகாணத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.

அவர்களால் போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விசேடமாக, அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரிவில் உள்ள அருகம்பை, கோமாரி மற்றும் பானம பகுதிகளில் இத்தகைய நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள், உள்நாட்டவர்களை தொடர்பு கொண்டு, சமூக ஊடகங்கள் மூலம் வாடிக்கையாளர்களை அடையாளம் காண்கிறார்கள். வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் போன்ற ஊடகங்கள் போதைப்பொருள் விற்பனை திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இவ்வாறான செயற்பாடுகள் நாட்டின் சுற்றுலாத்துறைக்கு மோசமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுற்றுலா அனுசரண குழுக்கள் வேதனையை வெளியிட்டுள்ளன.

ஹிறு செய்தி சேவை, இவை தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு வினவிய போது, “இதுவரை இந்த விடயம் அதிகாரபூர்வமாக எங்களது கவனத்திற்கு வரவில்லை. இருப்பினும், தகவல் கிடைத்துள்ளதையடுத்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என அந்த அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடற்கரைப் பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக பொலிசார் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளதாகவும், அவை தீவிரமாக பரிசீலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.