Top News
| அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை! | | மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய House of English இல்ல விளையாட்டுப் போட்டி | | 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு |
Oct 7, 2025

போதை பாவிக்கும் கர்ப்பிணிப் பெண்கள்

Posted on July 5, 2025 by Admin | 154 Views

தெஹிவளை, கல்கிஸ்ஸை, ரத்மலானை, மொரட்டுவ மற்றும் எகொட உயனோடு கூடிய இலங்கையின் முக்கியமான கரையோரப் பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணித் தாய்மார்களிடையே மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதால் கவலையடைந்துள்ளதாக தெஹிவளை-கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

இந்நிலையானது பாரிய சுகாதாரப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும், சுகாதாரத் துறையால் மட்டும் இதனை சமாளிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். அதற்கு மேலாக, சில கர்ப்பிணிப் பெண்கள், மது மற்றும் போதைப்பொருட்களை கரையோரப் பகுதிகளில் விற்பனை செய்து வருவதும் குறிப்பிடத்தக்க விஷயமாக உள்ளது எனவும் அவர் கூறினார்.

மேலும், இந்தப் பெண்களில் பெரும்பாலானோர் சுகாதார சேவைகளுக்கு அணுகுவதையே தவிர்ப்பதாகவும், தங்களைப் பதிவு செய்யவோ, பரிசோதனைக்காக மருத்துவமனை செல்லவோ விருப்பம் காட்டுவதில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், இத்தகைய மோசமான சூழ்நிலைக்கு ஒரு தீர்வு காண, பொதுப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பிற சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் உடனடி ஒத்துழைப்பும் தேவைப்படுவதாக அவர் வலியுறுத்தினார்.