Top News
| இலங்கை அமைச்சரவையில் மாற்றம்- புதிய நியமனங்கள் குறித்து எதிர்பார்ப்பு | | மட்டக்களப்பில் இருந்து வந்த பேருந்து தங்காலையில் விபத்து: உயிரிழப்பு உறுதி | | இன்று பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு பொதுமக்கள் அவதானம் தேவை! |
May 24, 2025

உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் நிலைமைகள் குறித்து ஆய்வு

Posted on May 19, 2025 by Admin | 54 Views

நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலையடுத்து, கட்சியின் பட்டியல் உறுப்பினர் தெரிவுகள், ஆட்சி அமைப்பில் பங்கேற்பு சாத்தியக்கூறுகள் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக வன்னி, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, பதுளை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்களுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) இன்று (மே 18) முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.

இக்கூட்டம், SLMC தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில், கட்சியின் செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர், பிரதித் தலைவர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் பங்கேற்புடன், “தாருஸ் ஸலாம்” தலைமையகத்தில் இடம்பெற்றது.

இவ்வேளையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாருக், எம்.எஸ்.எம். அஸ்லம் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் அர்ஷாத் நிஸாம்தீன், ஷாபி ரஹீம் ஆகியோரும் கலந்துகொண்டனர். தேர்தலுக்குப் பிந்தைய நிலவரங்களை நேரடியாக மதிப்பீடு செய்து, எதிர்காலத் திட்டங்களை உருவாக்குவதே இந்த கலந்துரையாடலின் பிரதான நோக்கமாக இருந்தது.