டிஜிட்டல் சேவைகளுக்கு 2025 அக்டோபர் மாதம் முதல் 18% வரி (VAT) விதிக்கப்படும் என பரப்பப்படும் செய்திகள் தவறானவை என்று தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்த வரி யோசனை ஏற்கனவே 2025ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டதெனவும், இது புதிய வரி அல்ல என்றும் அவர் கூறினார்.
ஆரம்பத்தில் இந்த வரியை 2025 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமுலாக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும், பின்னர் ஒக்டோபர் 1ஆம் திகதி வரை அது ஒத்திவைக்கப்பட்டதாகவும், தற்போது பரப்பப்படும் தகவல்கள் தவறானவை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.