சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு ஆரம்பப் பாடசாலையில், உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிர்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பாடசாலை சமையலறையில் மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட உணவுகளில், அளவுக்கு அதிகமாக செயற்கை நிறச்சாயங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது, இது மாணவர்களில் உடனடி உடல்நலக்கேடுகளை ஏற்படுத்தியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், பள்ளி அதிபரின் அறிவுறுத்தலின்படி, உணவுக்காக பயன்படுத்தப்பட்ட நிறச்சாயங்கள் ஆன்லைன் வாயிலாக வாங்கப்பட்டுள்ளதையும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த உணவு விஷச் சம்பவம் தொடர்பாக தற்போது வரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.