அரசாங்கத்தின் “Clean Sri Lanka” திட்டத்தின் கீழ், “சூழல் உணர்வும் சமூக பொறுப்பும் கொண்ட கல்வி சுற்றுச்சூழலை உருவாக்குதல்” என்ற கருப்பொருளில், அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் சுற்றுச் சூழல் சுத்தம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்று (09.07.2025) சிறப்பாக இடம்பெற்றது.
இந்த நிகழ்வானது, பாடசாலை அதிபர் MI.அஜ்மீர் தலைமையில்,பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பிராந்திய சுகாதாரப் பரிசோதகர் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் நடைபெற்றதுடன் மாணவர்கள் பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்தனர்.
மாணவர்களிடம் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், பாடசாலை வளாகத்தை தூய்மையானதாக பராமரிப்பதிலும் அவர்களை ஈடுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்வு, சமூக பொறுப்புணர்வுடன் கூடிய ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்தது.
பாடசாலை மட்டத்தில் மட்டுமன்றி, சமூக அளவிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்வு மிகவும் பாராட்டப்படக்கூடியதாக இருந்தது.