அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் பொத்துவில் கல்வி கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான சிறுவர் மெய்வல்லுநர் (Kids Athletics) விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2025 ஜூலை 5ஆம் திகதி, பொத்துவில் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றன.
இந்நிகழ்வில் பொத்துவில் கோட்டக் கல்வி பணிப்பாளர் ஜனாப் கே. ஹம்சா அவர்கள் தலைமையேற்று கலந்து கொண்டு விழாவை அரங்கேற்று சிறப்பித்தார். விழா மிகவும் உற்சாகம் மிகுந்தவையாகவும், மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் மேடையாகவும் அமைந்தது.
அப்கரைப்பற்று கல்வி வலயத்தின் விளையாட்டு விருத்தி இணைப்பாளரும் முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளருமான கௌரவ A.L. பாயிஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் திட்டமிடப்பட்ட இந்நிகழ்வில், பொத்துவில் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் ஆர்வமுடன் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உற்சாகம் அளித்தனர்.
இவ்வகை நிகழ்வுகள் மாணவர்களின் உடல் வலிமையை வளர்த்துக் கொண்டே, ஒத்துழைப்பும் ஒழுக்கமும் பயிற்றுவிக்கின்றன என்பது விழாவினால் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டது.