இன்று கொழும்பு தாருஸ் சலாமில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், SMM. முஷாரப் அவர்கள் கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நியமனம், கட்சித் தலைவர் சட்ட முதுமானி ரவூப் ஹக்கீம் மற்றும் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோரின் தலைமையில் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.
நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அப்துல் வாஸித், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பைசால் காசீம், எம்.எஸ். நழீம், கட்சியின் பிரதித் தலைவர் எஸ்.எம்.ஏ. கபூர், மற்றும் கட்சியின் பல உயர்பீட உறுப்பினர்கள் பங்கேற்று புதிய நியமனத்திற்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இவ்வகை நியமனங்கள், இளைஞர்களின் அரசியல் பங்களிப்பை ஊக்குவிக்கும் முயற்சியாக கருதப்படுகிறது.