Top News
| இன்று இரவு 11 மணி வரை பலத்த மின்னல் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை | | அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை! | | மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய House of English இல்ல விளையாட்டுப் போட்டி |
Oct 7, 2025

குசல் மெந்திஸின் அதிரடியினால் இலங்கை அணி அபார வெற்றி!

Posted on July 11, 2025 by Admin | 138 Views

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதல் Twenty20 போட்டியில் இலங்கை அணி சிறப்பான ஆட்டத்துடன் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவெடுத்தது. அதன்படி, தொடக்கத் துடுப்பாட்டம் செய்த பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்கள் எடுத்தது. பர்வேஸ் ஹொசைன் எமோன் 39 ஓட்டங்களும், முகமது நைம் 31 ஓட்டங்களும் பெற்று அணிக்கு ஆறுதல் தரும் பங்களிப்புகளை வழங்கினர்.

இலங்கை பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நுவான் துஷார, தசுன் சானக மற்றும் ஜெஃப்ரி வெண்டர்சே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

155 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலளிக்க களமிறங்கிய இலங்கை அணி, 19 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. குசல் மெண்டிஸ் அதிரடியாக 73 ஓட்டங்களையும், பெத்தும் நிஸ்ஸங்க 42 ஓட்டங்களையும் எடுத்து அணிக்கு ஆதரவை வழங்கினர்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலையில் சென்றுள்ளது.

அடுத்த, இரண்டாவது T20 போட்டி ஜூலை 13 ஆம் திகதி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது