அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தனது கல்வி வரலாற்றில் சாதனையை பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டு வெளியான 2024 சாதாரண தரப் பரீட்சையில், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவன் எம்.ஆகிப் அஹமட் தமிழ் மொழியைத் தவிர்ந்த அனைத்து பாடங்களையும் ஆங்கில மொழியில் எழுதி அனைத்து பாடங்களிலும் சிறப்பாக A தேர்ச்சி பெற்றுள்ளார்.
பொதுவாக, இரு மொழி கற்கைப் பிரிவில் கல்வி பெறும் மாணவர்கள் 6 பாடங்களை ஆங்கிலத்திலும் மற்றும் 3 பாடங்களை தமிழ் மொழியிலும் எழுதுவது வழக்கமாகும். ஆனால், எம்.ஆகிப் அஹமட் இந்த நிலைப்பாட்டை மாற்றி, தமிழ் மொழியைத் தவிர்ந்த அனைத்து பாடங்களையும் ஆங்கில மொழியில் எழுதி சிறப்பாக A தேர்ச்சி பெற்றுள்ளமை பாடசாலை வரலாற்றில் புதிய முன்னுதாரணமாகப் அமைந்துள்ளது.
இம் மாணவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த Dr. A.M. மஃபூப் ,Dr.எஸ்.ஐ.முஜீபா ஆகியோர்களின் புதல்வனாவார். பாடசாலை சமூகத்தினரும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் இவரது சாதனையை பெருமிதத்துடன் பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், மேலும் இரண்டு மாணவர்கள் (இரு மொழி கற்கை)Bilingual பிரிவில் அனைத்து பாடங்களிலும் A சித்தியை பெற்றுள்ளனர். மேலும், மூன்று மாணவர்கள் 8A மற்றும் 1B சித்திகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாணவர்கள் கல்வித் துறையில் அக்கரைப்பற்றை மேலும் உயர்த்தியுள்ளனர். இது எதிர்கால மாணவர்களுக்கு ஊக்கமும், வழிகாட்டும் ஒளியும் ஆகும்.