Top News
| சாதனைப் பாதையில் ஒளிரும் கல்விக் கோபுரமாம் அட்டாளைச்சேனையின் அந்நூர் மகா வித்தியாலயம் | | போத்தல், பைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வதற்கு தடை  | | அட்டாளைச்சேனை மாணவர்களின் கல்வி மேம்பாடு தொடர்பாக தவிசாளர் உவைஸ் மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர் ரஹ்மத்துல்லாஹ் இடையே சந்திப்பு! |
Jul 15, 2025

புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விரிவான விளக்கம்

Posted on July 11, 2025 by Admin | 112 Views

2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான விளக்கங்கள் வழங்கும் முதற்கட்ட நிகழ்வு, ஜூலை 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் போது, சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கங்கள் மற்றும் இலக்குகள், கொள்கை மற்றும் நடைமுறை வழிகாட்டுதல்கள், பாடத்திட்ட மாற்றங்கள், அவற்றை அமுல்படுத்தும் திட்டங்கள், மற்றும் ஆசிரியர் பயிற்சி நடவடிக்கைகள் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வு, எதிர்கால கல்வி பாதையை நிர்ணயிக்கும் ஒரு முக்கியமான படியாகவும், நாடு முழுவதும் கல்வி தரத்தை உயர்த்தும் முனைப்பின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.