(குரு சிஷ்யன்)
அட்டாளைச்சேனையைப் பெருமைப்படுத்தும் வகையில், அறபா வித்தியாலயம் 2024 (2025) ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் 91% தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது. இது கல்வி தரத்தில் தொடர்ச்சியான முன்னேற்றத்தைக் காட்டும் முக்கியமான சாதனையாகும்.
பாடசாலையின் மாணவர்கள் தொடர்ச்சியாக உயர் சாதனைகளை நிகழ்த்தி வரும் நிலையில், இந்த ஆண்டில் 4 மாணவர்கள் 8A மற்றும் 1B பெறுபேறுகளைப் பெற்று பாடசாலையின் நற்பெயரை மேலும் உயர்த்தியுள்ளனர்.
2024 (2025) சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய 68 மாணவர்களில் 62 பேர் உயர்தரத்திற்கு தகுதி பெற்றிருப்பதனூடாக பாடசாலையின் தரம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பாடங்களின் தேர்ச்சி விகிதம்:
இவ்வாறு பெறப்பட்ட சிறப்புப் பெறுபேறுகள், மாணவர்களின் முயற்சியும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும், மற்றும் பாடசாலை நிர்வாகத்தினரதும் அக்கறைப்பற்று கல்வி வலயத்தின் திட்டமிடலும், கல்வி வெற்றிக்கான அடித்தளமாக விளங்குகிறது.
மாணவச்செல்வங்களுக்கு வாழ்த்துகள்!
இவர்கள் சாதித்த கல்விச் சிறப்புகள் அட்டாளைச்சேனைக்கு மேலும் கௌரவம் சேர்த்துள்ளன.