(குரு சிஷ்யன்)
அக்கரைப்பற்றின் கல்விச் சேவையில் நீண்ட காலமாக சிறந்து விளங்கும் அஸ் ஸிராஜ் மகா வித்தியாலயம், 2024(2025) ஆம் ஆண்டு நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் 91% தேர்ச்சி என்ற சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளது. இது இப்பாடசாலையின் கல்வித்தரத்தையும், மாணவர்களின் உழைப்பையும் வெளிப்படுத்தும் வரலாற்றுப் பக்கமாக அமைகிறது.
இந்தப் பரீட்சையில் தோற்றிய 154 மாணவர்களில் 127 பேர் உயர் தரத்திற்கு தகுதியைப் பெற்றுள்ளனர். இது கல்விப் பயணத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்வாகும்.
மேலும், ஒரு மாணவர் அனைத்து 9 பாடங்களிலும் A சித்தி (9A) பெற்று பாடசாலையின் பெருமையை உலகளாவிய ரீதியில் உயர்த்தியுள்ளார்.
பாடவாரியாக பெற்ற தேர்ச்சி வீதம்:
இந்த சிறப்பான பெறுபேறுகளை வழங்கிய மாணவச்செல்வங்களுக்கும் முன்னாள் அதிபர் A.G. பஸ்மில், தற்போதைய அதிபர், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இப்பெரும் வெற்றி, மாணவர்களின் கடின உழைப்புக்கும், ஆசிரியர் குழுவின் முழுமையான அர்ப்பணிப்புக்கும் சாட்சியாக விளங்குகிறது.
அக்கரைப்பற்று கல்விக் கோட்டத்தில் அஸ் ஸிராஜ் மகா வித்தியாலயம் தனது களத்தில் மேலும் உயர்ந்தோங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.