(குரு சிஷ்யன்)
அழகிய இயற்கை சூழலில் எழிலூட்டும் ஒலுவில் பகுதியில் திகழும் அல் ஹம்றா மகா வித்தியாலயம், இவ்வருடம் 2024 (2025) சாதாரண தர பரீட்சையில் 87% தேர்ச்சி விகிதத்துடன் அபாரமான கல்விச் சாதனையைப் படைத்துள்ளது.
இப் பெறுபேறுகளில் குறிப்பிடத்தக்கது, 08 மாணவர்கள் 09A, மேலும் 08 மாணவர்கள் 08A எனும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளமை. இது பாடசாலையின் மட்டுமன்றி ஒலுவில் சமூகத்தின் பெருமையாகவும் விளங்குகின்றது.
இம்முறை 122 மாணவர்கள் பரீட்சையில் தோற்றியபோது, அதில் 106 பேர் உயர்தரத்திற்குத் தகுதிபெற்றுள்ளனர். இது அல் ஹம்றா பாடசாலையின் வரலாற்றில் முதன்மையான சாதனையாகப் பதியப்பட்டுள்ளது.
பாடவாரியாகச் சிறந்து விளங்கிய தேர்ச்சி விகிதங்கள்:
இந்த வெற்றிக்குத் தூணாக இருந்த மாணவச்செல்வங்களுக்கு, அவர்களின் உற்சாகமான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர் குழுவினருக்கு பாராட்டுக்கள்!
அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து வழிகாட்டிய சிறப்பான முயற்சியால் இந்த வெற்றிநிலை உருவாகியுள்ளது.
இவ்வாறு மாணவர்களின் விடாமுயற்சி, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் நிர்வாகத்தின் தாராளமான ஒத்துழைப்பு ஆகியவை இணைந்து அல் ஹம்றாவை ஒலுவிலின் கல்வி விளக்காக மாற்றியுள்ளன.
“அறிவால் உயர்வோம்” என்பதற்கான நிஜ உதாரணமாக அல் ஹம்றா மாணவர்கள் இன்று திகழ்கிறார்கள்!”