Top News
| சொத்து அறிக்கைகள் தாக்கல் செய்யாத அரச அதிகாரிகளுக்கு இன்று முதல் அபராதம் | | சுழலும் பந்து சுழலும் சாதனை – GTC challengesக்கு கிண்ணம், Thaikkanagar Hittersக்கு Runner up | | அட்டாளைச்சேனை பிரீமியர் லீக் 2025: GTC சேலஞ்சர்ஸ் அணி மீண்டும் சாம்பியன்! |
Jul 14, 2025

சுழலும் பந்து சுழலும் சாதனை – GTC challengesக்கு கிண்ணம், Thaikkanagar Hittersக்கு Runner up

Posted on July 14, 2025 by Admin | 65 Views

அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்களின் திறமையை கண்டறிந்து, அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஒழுங்குபடுத்தப்பட்ட அட்டாளைச்சேனை பிரீமியர் லீக் 2025 பகல் இரவு கிரிக்கெட் சுற்றுப்போட்டி, கடந்த ஜூலை 09ஆம் திகதி, அஷ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் விமரிசையாக ஆரம்பமாகி வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்தத் தொடரில் Thaikkanagar Hitters, GTC Challengers, Sadhanian Achievers, Sarqian Royals, Kappaladi Kings, Chenaioor Warriors மற்றும் Union Blasters ஆகிய 7 அணிகள் பங்கேற்றன. சுழற்சி முறையில் மொத்தம் 25 போட்டிகள் அணிகளுக்கிடையில் நடத்தப்பட்டன.

மிகுந்த உற்சாகத்துடன் 2025.04.13ம் திகதி நடைபெற்ற இறுதிப் போட்டியில், Thaikkanagar Hitters மற்றும் GTC Challengers அணிகள் நேருக்கு நேர் மோதின. பலத்த போட்டியின் முடிவில், தொழிலதிபர் எம்.ஏ.ரிழா தலைமையிலான GTC Challengers அணி தங்களின் சிறந்த அணிச்செயல்திறனால் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றி சாம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

வெற்றிபெற்ற GTC Challengers அணிக்கு ரூ. 60,000 பெறுமதியான பணப் பரிசுகளும், தங்கப்பதக்கங்கள் மற்றும் வெற்றிக் கிண்ணம் வழங்கப்பட்டது.

இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட(Runner-Up) Thaikkanagar Hitters அணிக்கு ரூ. 40,000 பெறுமதியான பணப் பரிசுகளும் தங்கப்பதக்கங்களும் வழங்கப்பட்டன.

தொடரில் விருதுகளைப் பெற்றோர்:

  • ஆட்டநாயகன் (Player of the Series): முபாரிஸ் (Sarqian Royals)
  • வளரும் திறமை வாய்ந்த வீரர் (Emerging Player): ரிஹாப் (Sadhanian Achievers)
  • சிறந்த துடுப்பாட்ட வீரர் (Best Batsman): முபாரிஸ் (Sarqian Royals)
  • சிறந்த பந்துவீச்சாளர் (Best Bowler): றப்ஸான்
  • இறுதிப் போட்டி ஆட்டநாயகன் (Final Man of the Match): சாதிர் (GTC Challengers)

இத்தொடர், அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர்களுக்கான விளையாட்டு மேடையாக மட்டுமல்லாமல், விளையாட்டு ஒழுங்கு மற்றும் திறமையை வெளிக்கொணரும் ஒளிக்கண்ணாடியாகவும் அமைந்தது. இளம் துடிப்புள்ள வீரர்களுக்கு இது ஒரு புதிய திசை தந்த நிகழ்வாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.