Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 7, 2025

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்க சிறப்பு அதிரடிப் படை செயல்பாட்டில்

Posted on May 20, 2025 by Admin | 155 Views

கொடூரமான குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையின் 15 குழுக்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை சிக்கவைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைவாக, தற்போது 18 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை இந்த சிறப்பு குழுக்கள் விசாரித்து வருகின்றன.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசுகையில், கடந்த ஆண்டில் மட்டும் 46 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்தச் சம்பவங்களில் 31 தாக்குதல்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதனை ஒடுக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.