பொத்துவிலைச் சேர்ந்த சிசு நல நிபுணர் டாக்டர் ஷர்மி ஹஸன், மொறட்டுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிசு நல மற்றும் சிறுவர்கள் மருத்துவப் பிரிவில் சிரேஷ்ட விரிவுரையாளராக (Senior Lecturer) நியமிக்கப்பட்டுள்ளார்.இது அவரது தாயகமான பொத்துவில் மக்களுக்கு பெருமிதம் அளிக்கின்ற நிகழ்வாக அமைந்துள்ளது.
இந்த புதிய கல்விப் பொறுப்புடன் இணைந்து, அவர் தற்போது களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிசு நல நிபுணராகவும் (Neonatologist) கடமையாற்றவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டம் பெற்ற டாக்டர் ஹஸன், தனது சிறுவர்கள் மருத்துவப் பின்படிப்பு படிப்புகளை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தார். அங்கு, DCH (Diploma in Child Health) மற்றும் MD (Paediatrics) பட்டங்களைப் பெற்று திறமையாக தனது கல்வித் துறையை விருத்தி செய்துள்ளார்.
பொத்துவில் மத்திய கல்லூரி மற்றும் கல்முனை ஸாஹிரா கல்லூரிகளில் கல்வி பயின்ற இவர், இலங்கையின் முதலாவது முஸ்லிம் நியோநேடாலஜி நிபுணராக (Neonatologist) பெயர்பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நியமனம் அவரது தனிப்பட்ட சாதனையாக மட்டுமல்லாமல், பொத்துவில் மக்கள், முஸ்லிம் சமூகம், நாட்டின் சுகாதார துறைக்கே பெரும் பாராட்டுக்குரிய நிகழ்வாக அமைந்துள்ளது.