அம்பாறை மாவட்ட கரும்புச் செய்கையாளர்கள் அமைப்பின் முக்கிய கூட்டம் இன்று (16.07.2025) இறக்காமத்தில், அமைப்பின் தலைவர் ஹாரூன் தலைமையில் நடைபெற்று முடிந்தது.
இச் சந்திப்பில், விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்கள், கரும்பு விளைச்சலின் தற்போதைய நிலை, விலை நிர்ணயம், விற்பனை சந்தைகளின் பிரச்சினைகள் மற்றும் அரசின் கொள்கைகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
சந்திப்பில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை, கரும்புச் செய்கையாளர்களின் தேவைகள் குறித்து தனிப்பட்ட கவனம் செலுத்துவதாக உறுதியளித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், இறக்காமப் பிரதேச சபைத் தவிசாளர் எம். முஸ்மி உள்ளிட்ட உள்ளூராட்சி தலைவர்களும் இதில் பங்கேற்று, செய்கையாளர்களுடன் நேரடியாக பேசினர்.
கரும்புத் தொழிலின் வளர்ச்சிக்காக சக்திவாய்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.