அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட மீனோடைக்கட்டு தொடக்கம் பாலமுனை வரையிலான பல மின்கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த LED விளக்குகளின் இணைப்பு வயர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் துண்டிக்கப்படுவதால், கடந்த சில நாட்களாக அப் பகுதிகள் இரவின்போது முழுமையாக இருள் சூழ்ந்த நிலையிலேயே காணப்பட்டன.
இந்த நிலைமையை கவனத்தில் எடுத்த அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் கௌரவ A.S.M. உவைஸ் அவர்கள் இன்று நேரில் அப்பகுதிக்கு விஜயம் செய்து, மின் இணைப்புகளை மீண்டும் பழுது பார்க்கும் பணிகளை ஆரம்பிக்கச் செய்தார். பொதுமக்கள் பாதுகாப்பிற்கும், சாலைகளில் போக்குவரத்து வசதிக்கும் முக்கியத்துவம் அளித்த அவர், LED ஒளியை விரைவாக ஒழுங்கமைக்க அதிகாரிகளை வழிநடத்தினார்.
இக் களப்பணியில், பிரதேச சபை உறுப்பினர் கெளரவ A.C. நியாஸ், பிரதேச சபை செயலாளர் L.M. இர்பான் ஆகியோரும் கலந்து கொண்டு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
மக்கள் பாதுகாப்பு மற்றும் பொது வசதிக்காக LED ஒளிக்கம்பங்களை பழுது பார்த்து மீண்டும் செயல்படுத்தும் இந்த முயற்சி, பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.