Top News
| அதிவேக நெடுஞ்சாலையில் வேகக் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு கடும் அபராதங்கள் | | அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஒலுவில் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவிற்கு விஜயம் | | வாட்ஸ்அப் மூலம் பண மோசடி அதிகரிப்பு |
Jul 31, 2025

பலத்த காற்று தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

Posted on July 18, 2025 by Hafees | 91 Views

புத்தளம் முதல் கொழும்பு, காலி, மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் இடைக்கிடையில் 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கரையோரங்களில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களை அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.