அக்கரைப்பற்றில் இயங்கி வரும் IPHS Campus நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) பொறியியலாளர் ஹமீட் அலி அவர்களின் தலைமையில், பாலமுனை பிரதேச வைத்தியசாலைக்கு படுக்கை விரிப்புகள் (பெட்ஷீட்கள்) மற்றும் தலையணைகள் உள்ளிட்ட உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
இந் நன்கொடை வழங்கும் நிகழ்வு வைத்தியசாலையில் நடைபெற்றது. இதில் வைத்திய அதிகாரி Dr. நுஃபைல், தாதியர் நேர்சிங் அதிகாரி உமர் அலி, மற்றும் வைத்தியசாலை சுகாதார உதவியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
வைத்தியசாலையின் சேவைகளை மேம்படுத்தவும், நோயாளிகளுக்கு அதிக வசதிகளை வழங்கவும் இந்நன்கொடை குறிப்பிடத்தக்க பங்காற்றும் என கூறப்படுகிறது. சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்படும் IPHS Campus நிறுவனம் எடுத்துள்ள இந்த முயற்சி, பிற நிறுவனங்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும் காணப்படுகிறது.