அக்கறைப்பற்று கல்வி வலயத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று (21.07.2025) பாடசாலையின் அதிபர் திரு எம்.ஐ.எம். அஜ்மீர் தலைமையில் சிறப்பாகவும், விமரிசையாகவும் நடைபெற்றது.
ஒழுக்காற்று மற்றும் கலாசார குழுவின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணவர்களின் தலைமைத்துவ திறன்கள், பொறுப்புணர்வும் ஆளுமை வளர்ச்சியும் முக்கிய அம்சங்களாக எடுத்துக்காட்டப்பட்டன. இதன் மூலம் மாணவர்கள் எதிர்காலத் தலைவர்களாக உருவாகத் தேவையான கருத்துகள் மற்றும் பயனுள்ள உரைகள் நிகழ்த்தப்பட்டன.
மொத்தமாக 35 மாணவத் தலைவர்களுக்கு சின்னங்கள் அணிவிக்கப்பட்ட இந்நிகழ்வில்,
பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. எம்.எச். றஸ்மி, விசேட அதிதியாக உதவிக் கல்விப் பணிப்பாளரும் பாடசாலையின் EPSI இணைப்பாளருமான கெளரவ ஏ.எல். பாயிஸ்,
சிறப்பு அதிதிகளாக பாடசாலையின் SDEC செயலாளரும் மக்கள் வங்கியின் சந்தைப்படுத்தல் முகாமையாளருமான திரு எம்.ஐ. நபீல், மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர் திருமதி எம்.ரி. அமீரா, அட்டாளைச்சேனை பிறப்பு இறப்பு பதிவாளர் மெளலவி ஏ.ஆர்.சப்ரின், சொக்கமோ சர்வதேச பிரைவட் லிமிடட் நிறுவனத்தின் பணிப்பாளர் தேசமானி ஜே.ரியாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், ஆசிரியர் குழாம், மாணவர்களும் நிகழ்வில் பங்கேற்று, நிகழ்வை சிறப்பூட்டினர்.
இத்தகைய நிகழ்வுகள் மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றலையும், சமூகப் பொறுப்பையும் வளர்ப்பதற்கான அடித்தளமாக அமையும் என்பதில் ஐயமில்லை