Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

பிரதேச மக்களின் சுமைகளைத் தீர்க்கும் களமாக அமைந்த அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கன்னி அமர்வு

Posted on July 21, 2025 by Admin | 325 Views

(அபூ உமர்)

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதல் (கன்னி) அமர்வு, இன்று திங்கள் கிழமை சபை மண்டபத்தில் தவிசாளர் கெளரவ ஏ.எஸ்.எம். உவைஸ் அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

கன்னி உரையில் தவிசாளர் உவைஸ்,

அனைத்து உறுப்பினர்களையும் உளங்கனிந்து வரவேற்று, புதிய செயற்காலம் அனைத்துப் பிரதேச மக்களுக்கும் சேவை செய்யும் புது திசையின் தொடக்கமாக அமைய வேண்டும் எனக்கூறினார். சபையின் செயற்பாடுகள் தொடர்பாக கருத்து வெளியிடும் வாய்ப்பு அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டதுடன், சபையின் செயல் திறனை வலுப்படுத்தும் அபிவிருத்தி, நிர்வாக மற்றும் தொழில்நுட்ப குழுக்களின் நியமனத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இன்றைய அமர்வின் முக்கிய அம்சமாக, இரு தீர்மானங்கள் சபையில் முழுமையாக நிறைவேற்றப்பட்டன:

  1. பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் இன அழிப்பு நடவடிக்கைகளை கண்டிக்கும் தீர்மானம், மற்றும் காசா மக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
  2. இலங்கையில் சட்டவிரோதமாக இயங்கும் இஸ்ரேல் சார்பான குடியேற்றங்கள் மற்றும் சபாத் இல்லங்களை அகற்ற, அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய கண்டனத் தீர்மானமும், அதனுடன் தொடர்புடைய கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அமர்வில் உப தவிசாளர் கெளரவ எம். பாறூக் நஜீத், சபை செயலாளர் எல்.எம். இர்பான், சபையின் கெளரவ உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த அமர்வு, பிரதேச மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கும் முக்கிய தொடக்கமாக அமைந்துள்ளது.