Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

ஆசிரியர் நியமனங்களில் மௌலவி ஆசிரியர் நியமனங்களும் கருத்தில் கொள்ளப்படும் உதுமாலெப்பை எம்பியின் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை

Posted on July 21, 2025 by Admin | 190 Views

(அபூ உமர்)

அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.எம்.ஜீ.எஸ். நாலக களுவெவ அவர்களை இன்று (21.07.2025) கல்வி அமைச்சில் சந்தித்து, மௌலவி ஆசிரியர் நியமனங்கள் தொடர்பாக முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தார்.

இச் சந்திப்பின் போது, நீண்ட காலமாக நாட்டில் மௌலவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படாமை, முஸ்லிம் பாடசாலைகளில் மெளலவி ஆசிரியர் பற்றாக்குறை உருவாகி இருப்பது ஆகிய விடயங்களை பாராளுமன்ற உறுப்பினர் கவனத்துக்கொண்டு வந்தார்.

வரலாற்றுப் பின்னணி குறித்து தெரிவித்த அவர்,

  • 1992ஆம் ஆண்டு 295 மௌலவி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாகவும்,
  • அதனுக்குப் பிறகு 2010ஆம் ஆண்டு மட்டும் 120 பேர் நியமிக்கப்பட்டதாகவும்,
  • இறுதி 15 வருடங்களாக எந்தவிதமான மௌலவி நியமனங்களும் வழங்கப்படவில்லை என்றும் வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து அவர் கூறுகையில்,

“நாட்டில் 321 அரபுக் கல்லூரிகள் செயற்பட்டு வருகின்றன. இவை இலங்கை கலாசார அமைச்சால் பதிவு செய்யப்பட்டுள்ளவையாகும். ஒவ்வொரு ஆண்டும் 500க்கும் மேற்பட்ட மௌலவிமார்கள் பட்டம் பெற்று வெளிவருகின்றனர். இவர்கள் கல்வித் தகுதிகளையும் தேசிய பரீட்சைச் சித்திகளையும் பெற்றுள்ளனர்(GCE O/L & A/L). இருப்பினும், இஸ்லாம் மற்றும் அரபு பாடத்திற்கான ஆசிரியர்கள் இல்லாத நிலை தொடர்கிறது. எனவே, இந்த வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் மௌலவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியமாகிறது,” எனக் கூறினார்.

இந்த கோரிக்கையை ஏற்கையின் பேராசிரியர் நாலக களுவெவ பதிலளிக்கையில்,

“எதிர்கால ஆசிரியர் நியமனங்களில், மௌலவி ஆசிரியர் நியமனங்களும் உரிய முறையில் பரிசீலிக்கப்படும்,” என உறுதியளித்தார்.

இச்சந்திப்பு, பல வருடங்களாக நிலவி வரும் கல்வி அடிப்படை தேவை ஒன்றைத் தீர்க்கும் தொடக்கமாக பார்க்கப்படுகிறது