2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.
அறிக்கையில் அவர் தெரிவித்ததாவது,
பாடசாலைகளுக்கான மாணவர் தெரிவும், புலமைப்பரிசில் வழங்கும் நோக்கத்திற்காக நடைபெறும் இப்பரீட்சை, நாடு முழுவதும் 2787 பரீட்சை நிலையங்களில் ஒரே நாளில் நடைபெறவுள்ளது.
பரீட்சை நேர அட்டவணை:
இதற்கான அனைத்து பரீட்சார்த்திகளின் வரவு இடாப்புகள் (Admission Cards) தபாலினூடாக அவரவர் பாடசாலை அதிபர்களுக்குக் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளன.
வரவு இடாப்பு பெறாத பாடசாலைகள் அல்லது அதிபர்கள்,
👉 www.doenets.lk இல் “எமது சேவை” பகுதியில் உள்ள Exam Information Centre வழியாக அல்லது
👉 http://onlineexams.gov.lk/eic மூலமாக வரவு இடாப்பை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தகவல் திருத்தங்கள்:
விண்ணப்பதாரர்கள் பற்றிய தகவல்களில் திருத்தங்கள் தேவைப்பட்டால், அவை 2025 ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 4 வரை நிகழ்நிலையில் (online) செய்ய முடியும்.
தகவலுக்கு தொடர்பு கொள்ள:
இந்த அறிவிப்பின் மூலம் மாணவர்கள், பெற்றோர் மற்றும் பாடசாலை நிர்வாகங்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்வது அவசியமாகும்