பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அவர் குற்றவாளி என விசாரணைக் குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில், அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என குழு பரிந்துரை செய்துள்ளது.
இது தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.