Top News
| யானை-மனித மோதல்களை சமாளிக்க மாவட்ட குழுக் கூட்டத்தில் பல பரிந்துரைகளை கூறிய பிரதித் தவிசாளர் பாறுக் நஜித் | | அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாக சபைக்கு தெரிவாகியோர் விபரம் | | அஷ்ஷெய்க் ஹிதாயத்துல்லாஹ் றஸீன் எழுதிய இரு முக்கிய நூல்கள் நாளை வெளியீடு |
Jul 25, 2025

கடலுக்கு செல்ல வேண்டாம் – பொத்துவில் வரை ஆபத்து!

Posted on July 22, 2025 by Admin | 84 Views

கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பிராந்தியங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிநேரத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், கடல் நிலை மிகுந்த கொந்தளிப்பாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் 24 மணிநேரங்களில் மேற்சொன்ன கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அதிகாரிகள் கடுமையான அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடிய நிலை காணப்படுவதாகவும், மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையாக மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடலுக்கு அருகிலுள்ள பகுதிகளில் சுழற்சி வலயம் உருவாகக் கூடும் என்பதால், பொதுமக்களும், பயணிகளும் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.