Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

ஹிங்குறாண கரும்பு விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து ஹக்கீம் தலைமையில் சந்திப்பு!

Posted on July 22, 2025 by Admin | 174 Views

அம்பாறை மாவட்டத்தின் ஹிங்குறாண சீனித் தொழிற்சாலை பகுதிகளில் கரும்பு விவசாயத்தில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தீர்வுகள் தேடுவதற்காக, முக்கிய அரசியல் மற்றும் அரசாங்க அதிகாரிகள் இடையே செவ்வாய்க்கிழமை (22) முக்கியமான சந்திப்புகள் நடைபெற்றன.

இந்தக் கூட்டங்களில், ஹிங்குறாண கரும்பு உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதிநிதிகள், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமை பாராளுமன்ற வளாகத்தில் நேரில் சந்தித்து, தங்களின் பிரச்சினைகள் குறித்து விரிவாக பேசினர்.

அதனைத் தொடர்ந்து, அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் வழிகாட்டலின்படி, விவசாயிகள் குழுவினர் கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியுடனும் அவரின் பாராளுமன்ற அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதில், விவசாயிகளின் கரும்புச்செய்கை தொடர்பான இடர்பாடுகள், தொழிற்சாலையின் செயல்பாடுகள் மற்றும் நிலுவைத் தொகைகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் பரிசீலனை நடைபெற்றது.

இந்த சந்திப்பின் முடிவில், அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என உறுதியளித்தார். தேவையான நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில், கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். வாசித் மற்றும் மஞ்சுல ரத்நாயக்க ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்தச் சந்திப்புகள், நீண்ட காலமாகக் கவனிக்கப்படாமல் இருந்த விவசாய பிரச்சினைகளுக்கு நம்பகமான தீர்வு காணும் முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.