உலக சந்தையில் உர விலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், இதன் நேரடி தாக்கம் நாட்டின் உள்நாட்டுப் சந்தையிலும் உர விலை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விவரங்களை விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த், நாட்டின் பல்வேறு மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது பகிர்ந்துள்ளார்.
“உர விலை அதிகரிப்பு என்பது ஒரு பொதுவான பிரச்சினையாக இருந்தாலும், விவசாயிகளுக்கு சலுகை விலையில் உரங்களை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்” என அவர் வலியுறுத்தினார்.