வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பிரதம பொறியியலாளரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான சிராஜுதீன் மறைவுக்கு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.
சிராஜுதீனின் மறைவால் ஏற்பட்ட மனவலியைப் பகிர்ந்து கொண்டு வெளியிட்டுள்ள செய்தியில், “மரணமென்ற ஏற்க இயலாத உண்மை மனித வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நினைவூட்டுகிறது” என ரிஷாட் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
“சிராஜுதீன் பட்டங்களையோ பதவிகளையோ விரும்பாதவராக இருந்தார். ஆனால் சமூகத்தின் நலனுக்காக அவர் செய்த பணிகள் வலிமையானவை. அவர் ஒரு உண்மையான மக்கள்சேவகராக இருந்தார். கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அபிவிருத்திக்குழுவில் அவர் செயல்பட்ட விதம், கல்வி வளர்ச்சிக்காக எடுத்த முயற்சிகள் எல்லாம் அவரது அர்ப்பணிப்பை விளக்கும்.”
அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் கட்சியின் வளர்ச்சிக்காக அவர் செய்த பங்களிப்பை நினைவுபடுத்திய ரிஷாட், “அவரது சேவையை மதித்து, கட்சி பெற்ற போனஸ் ஆசனத்தை அவருக்கு ஒதுக்கினோம். அது அவருக்கான அங்கீகாரம் மட்டுமல்ல, கல்வியியல் துறையினரையும் அரசியலுக்குள் வரவேற்க வேண்டும் என்ற எங்கள் கட்சியின் நோக்கத்தையும் பிரதிபலிக்கிறது” எனத் தெரிவித்தார்.
இறுதியாக, “அவரது நற்பணிகள் எமது கட்சியால் என்றும் ஞாபகமாக வைத்துக் கொள்ளப்படும்.